பக்கம்:சமணமும் தமிழும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணத் திருப்பதிகள் 163) திருமேனி, 18, புட்பாந்தி படரார் மாணாக்கர் பெரு ணந்தி படரார் செய்வித்த திருமேனி, 19. வெனற்குடி மூத்த அரிட்ட கேமி படாரர் மாணாக்கர் குணநந்தி பெரியா ரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல். 20. கெடு மாத் தோட்டத்து குணத்தாங்கியார் செய்வித்த திருமேனி, 21. திருநெச்சுரத்து குமரனமலன் செய்வித்த திருமேனி, இங்குக் காணப்படும் சுமார் நூறு கல்வெட்டுச் சாசனங் களில் இருபத்தொரு சாசனங்களை மட்டும் இங்குக் காட்டினேன். இச் சாசனங்களைப் பார்க்க விரும்புவோர் (South Indian Inscriptions) என்னும் நூலிற் கண்டு கொள்க.' இவ்வூர் பண்டைக் காலத்தில் கெச்சா நாட்டுத் திருநெச்சுரம்,' என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது, இங்குப் பண்டைக் காலத்தில் சித்தாந்தம் (சமண சித்தாத் தம்) நாள்தோறும் உபதேசிக்கப்பட்டு வந்ததையும், பசித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்னிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு அவசர தானமாகச் சில இலக்கணத் தானஞ் செய்திருந்த செய்தியையும் இன்னொரு சாசனம் கூறுகின்றது. வீரசிகாமணி : சங்கராயிஞர் கோயிலுக்கு வட மேற்கு 9 மைலில் உள்ளது, இங்குள்ள பாறையில் குகைகள் உள்ளன, ஒரு குகையில், ஒரு வட்டத்திற்குள் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன, இன்னொரு குகையில் சில உருவங்கள் பாறையில் செதுக்கப்பட் இன்னன. இவ்வூரார் இவ்வுருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கின்றனர். கயிலாசநாதர் கோயில் என் ஜம் ஒரு சிறு கோயிலும் இங்கு உண்டு, பஞ்ச பாண்டவர் உருவம் என்ற கதப்படுவன சமணத் திருவுருவங்க சாகும் என்று கருதுகின் றனர். குளத்தூர் : ஒட்டப் பீடாரத்திலிருந்து வடகிழக்கு 141 மைலில் உள்ளது. இவ் ஆரில் உள்ள சமணத் திரு மேனியை இவ்வூசார் வணங்கி வருகிறார்கள்.* 1. S. I. I. VoI V. PP. 121 to 1sT. 2. Topy. List, P. 30i, 3. Top, List, P. 307,