பக்கம்:சமணமும் தமிழும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வடக்கிருத்தல் 181 கிறது. இது தற்கொயைாகாது என்று விடையிறுக்கிறது நீலகேசி என்னும் சமண சமய நூல். நீலகேசி கூறுவது வருமாறு : அழிவு காலத் தந்த்தொடர்ப் பாடெலாம் ஒழியல் வேண்டுமென் செற்றுமை தால்கொனீஇ வழியும் காட்டுமம் மரண் படை மார்கண்மேல் பழியில் கிட்டுரைத் தாற்பய னென்கேயோ இதற்கு உரை எழுதிய சமயதிவாகர வாமன முனிவர், இவ்வாறு வினக்கக் கூறுகிறார்: " சல்லேகனையாவது --மாண காலத்திச் சாகின்சே மென் அ சங்கிலேசம் (வருத்தம்) சரிதாதியில் சங்கமெல்லா மொழியல் வேண்டுமென்று சொல்லிச் சித்த சமாதானம் பண்ணுவித்துக் கலக்க நீக்கி, பரலோக கமன பாதேய (கட் டமு.தி) மாகிய பஞ்ச கமஸ்கார பரம மந்திரோபதேசம் பண்ணி ரத்தினத் திரய ரூபமாகிய சன்மார்க்கக் சலக் காமை, தர்மோபதேசனாதிகளாற் கட்டுதல், எல்லாப் படியும் விலக்கப் படாத, எரியால் இல்லம் அழியில் அதனகத்தில் - எல்ல பொருள் கொண்டு போவான்போற் சாம்போது பற்றற்று அருள் கொண்டு போத வறம், என்பனவற்றனும் சல்லேகணை பாமா மறிந்து சொல்லிக் கொள்க." பத்திரபாகு முதலான சமணசமயப் பெரியார்கள் பலர் சல்லேகனே விருந்து உயிர் நீத்த செய்தி மைரூர் காட் டில் சிரவண பெள்கொன என்னும் இடத்தில் உள்ள கல் வெட்டுச் சாசனங்களினால் தெரிகிறது. சமணசமயத் துறவியாராகிய சவுந்தி அடிகள் என்னும் மூதாட்டியார் சல்லேகளை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. கோவலன் கொலையுண்டதும், பாண்டியனும் கோப்பெரும் தேவியும் 1, மொச்சலபாதச் சுருக்கம். 5-ம் செய்யுள்.