பக்கம்:சமணமும் தமிழும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூ. சமணசமயத்தில் மகளிர்நிலை பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய் தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமணசமயக் கொன்கை, பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமணமதத் துணிபு ஆகும், அவர்களுள், சுவேதாம்பா சமணர் பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவு பூண்டு மனத்தை அடக்கி உடம்பை வருத்தித் துன் பங்களைப் பொறக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாத படியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் அறவுபூண்டு மன வறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பாச் சமணர் கூறுகின்றனர். அனால், திசம்பரச் சமணர் பெண் பிறவியில் வீடுபேறடைய முடியா தென்றும், பெண் கன் கனாகப் பிறந்து, துறவு பூண்டு நோற் மூல் தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர். ஒருவன் பாரைபேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொன்கை . தமிழ்நாட்டில் முற்காலத்தில் இருந்தவரும் இப்போது இருப்பவரும் திகம்பரச் சமணர் ஆவர். ஆகவே, திசம்பரச் சமணரால் இயற்றப்பட்ட சமணசடியத் தமிழ் நூல்க னிலும் பெண்மக்களுக்கு மோட்சம் இல்லை என்று எழுதி வைத்தனர். பெண்கள் மோட்சம் அடைய விரும்பினால், முதலில் அவர்கள் ஆணாகப் பிறக்கவேண்டும்; கணாகப் பிதந்தாலும் துறவு பூண்டு கடுமையாக சோன்பிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் அடையமுடியும் என்பது சமண்சடியக் கொள்கை. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் முதல் சூத்திரம், " எழுத் தெனப் பப அகர முதல னச இறுவாய் மூப்பஃ தென்ப