பக்கம்:சமணமும் தமிழும்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

192 சமணமும் தமிழும் சைவர் கட்டிய கதையில் ஏழுகடல் என்பது, மேட்டுப் பட்டிக் கிராமத்தில் சித்தர்மனையிலுள்ள எழுகடல் என்னும் ஈனேயையன்று, சொக்கநாத சுவாமி கோயிலுக்கு முன் பாகப் பிற்காலத்தில் ஏழுகடல் அல்லது சப்தசாகரம் என்னும் பெயரால் அமைக்கப்பட்ட குளத்தைக் குறிக் சிறது, ஏழுகடல் தீர்த்தம் என்றும் இது பதப்படும். இக்குளம் சக ஆண்டு 1438-இல் (கி. பி. 1516-இல்) சாளுவ நரச நாயகன் நாசையன் என்பவரால் அமைக்கப்பட்ட தென்பது இந்த சப்தசாகத் தீர்த்தக்கரையில் உள்ள சாசினத்தினால் தெரியவருகிறது." சமணர் உறையூரை அழித்ததாகக் கூறப்பட்ட சுதையும் பிற்காலத்தில் மாற்றப்பட்டு, சிவபெருமான் சாபத்தினால் மண்மாரி பெய்து உறையூர் அழிக்கப்பட்ட தாகப் புராணக் கதை கற்பிக்கப்பட்டது. இச்செய்தியைச் செவ்வந்தி புராணம், உறையூர் அழித்த சரூக்கத்தில் காண்க. இவ்வாறு சி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் காலத்தில் இல்லாத கதைகள், கி. பி. 12-ஆம் நூற்றாண் டில் ஒட்டக்கூத்தர் காலத்தில் சமணர் செய்ததாக வழங்கப் பட்டுப் பின்னர் சி. பி. 16-ஆம் எத்தாண்டில் சிவபெரு மான் செய்ததாகத் திருத்தியமைச்சப்பட்டன என்பது இதனால் அறியப்படும். புசாணக்கதைகள் எவ்வாறு புனையப்படுகின் தன என்பதற்கும் இக்கதைகள் காலத்துக்குக் காலம் எவ்வா தெல்லாம் மாறுபடுகின்றன என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும், . . 'சய்த 1, 161 of 1987-3S. 5.1. Ey, Roys 1987-38, P. 104.