பக்கம்:சமணமும் தமிழும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சமணமும் தமிழும்


“கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோடி வைபிறவும்
பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு
நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்”

திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன:

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
          விழைவார், கொலையினை விழையார்; பொய்
உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
          உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை
          துவ்வார், விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார்; இரவுணல்
          புகழார்; குரவரை இகழாரே”

இச் செய்புள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கொண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர் யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

“செய்யும் வினையும் இருள் உண்பதுவும்
         தேனும் நறவும் களவும்
பொய்யும் கொலையும் மதமும் தவிரப்
         பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதமும் விழியும்
         காலும் நிறமும் போலும் கமலங்
கொய்யும் மடவார் கண்வாய் அதரங்
         கோபங் கடியுந் தீபங் குடியே”

இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு