பக்கம்:சமணமும் தமிழும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

31


சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

“பெரியசொல் பொய்களவு பிறர்மனையி லொருவல்
பொருள் வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல்
பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்
மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்”

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங் கேள்விச் சருக்கம் 133). இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக்காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக் கூடாது.

தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2, அசட்டைத்தனத்தினால் பூச்சிகளைச் சாகவைக்காதிருத்தல்; அதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 6. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்கள் வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்;

4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிதருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

இருபோகம் வரைதல் என்பது போகோப போக பரிமாண விரதம். அதாவது போகப் பொருள்களை வரையறுத்தல், உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள் காய்