பக்கம்:சமணமும் தமிழும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் தேர்ந்தவராக இருக்தும், அந்த மொழியில் வாது செய்யா மல் நாட்டு மக்கள் போம் தாய்மொழியிலே வாதம் நிகழ்த் தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்த வாதி மூனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக் குச் சித்தசேன திவாகார் ஓடர் ஆனார். இதன் பிறகு, சித்தசேன திவாகர், வடநாட்டு மக்கள் பேசிப் பயின் றவந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட் டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் மொழி பெயர்த்தெழுதக் கருதித் தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனி வர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப் பயின்று வரும் அர்த்தமாகதி பொழியில் உள்ள நவ்களை வட மொழியில் எழுதிவைத்துப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மையினை உணர்த்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னி ரண்டு ஆண்டு வரை வாய் பேசாமல் மனமைபோல் வாழ்ந் திருந்தார். இந்த வரலாற்றினால், சமணரும் (பௌத்தரைப் போலவே, தாய்மொழியின் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தங்கள் மதக் கொள்கைகளைப் போதிக்க வேண்டும் என் னும் கருத்துள்ளவர் என்பதும், மக்கள் அறியாத வேறு மொழியில் நால்களை எழுதிவைத்துப் பயன்படா தபடி செய்வது பெரும்பாவம் எனக் கருதிவந்தனர் என்பதும் விளங்குகிறது. | இவ்வாறு விரிந்த மனப்பான்மையுள்ள சமணர்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழியில் தம் மதக் கொள்கை களை எழுதினார்கள். வேறுபல நீதி நூல்களையும் சிகண்டு நூல் களையும் சாவிய நூல்களை யும் ஒழுக்க எல்களையும் எழுதி னார்கள், இவையும் சமணசமயம் தமிழ் நாட்டில் பாவுல தற்குக் காசணமாயிருந்தன.