பக்கம்:சமணமும் தமிழும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயப்போர் 55 கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த கருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் சொல் செய்வோரையும் கொல்ல வேன் வினய யும் வெறுத்தவராகலின், கொங் வேள்வி செய்பவனும் அ தசெய்ய உடன் படுபவனுமாகிய இவ் வைதிசப் பார்ப் பனனுக்கு உதவி செய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர். இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை வினங்குகின்தது. இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண் டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பெளத்தர் இயற்றி பதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் தாகச் சமனார் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சம பத்தை பொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்தி களும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகை யைத் தெளிவாக்குகின் றன. இவ்வாறு, பல சற்றண் கெளுக்கு முன்னர், வைதிகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக் குள் தமிழ்காட்டிலே சடைபெற்ற போராட்டத்தில் வைதிக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவை பாகும் :-வைதீகர் கொல் வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராம்மணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டு மன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்தியத்ததும் மத்முெரு காரணம். அன்றியும், "சுவர்ணதானமே, சேஷத் திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, சஜதானமே, பார்பாதானமே கன்னியா தானமே" என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் 1. மணிமோவே. இ-ஆம் காதை, 32-55.