பக்கம்:சமணமும் தமிழும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயப்போர் பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தாவனையில் பன்னிகொன்ரூக் கோ வினை' என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட--ஆரிய வைதிக மதக் கலப்பினை வற்புறத் ஓவதற்கே, இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புரானத்தில், வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க' என்றும், ' தாரணிமேற் சைவமுடன் அரு மறையின் நிறைவினங்க' என்றும், சைவமுதல் லைசிக மும் தழைத்தோங்க' என்றும், ' அருமறைச் சைவர் தழைப்ப' என்றும், 'சைவதெறி வைதிகத்தின் தருமநெறி பொடுத் தழைப்ப' என் நம் ஆங்காங்கே திராவிடவைதிக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார். புதிதாகத் தோன் தீய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றனச் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடகாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு 'அகச் சமயம்' என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதச்சனில் சில பலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண் ஒருத்தன. இந்த மதங்களின் உதவியினாலும், 'பக்தி' இயக்கத்தின் இணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமணசமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று, இந்து' மதம் சமணசமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.