பக்கம்:சமணமும் தமிழும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் < வெறுப்பொடு சமணர் மண்டர் வீதியில் சாக்கியர்கள் பின்பால் பொறப்பரி யனகள் பேசிப் போவதே சோயதாகி குறிப்பெனக் கடையுமாசில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!' என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது, திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சம ணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவழிம், இவற்றை நினைவுப் படுத்த மதுரைப் பொற்குமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரக் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் தடை பெற்றுவரும் உற்சவங்களில் ஐந்திதாள் கழுவேற்று உற் சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை கடைபெற்றதற்கு முதன்மையான சான்று கனாகும். காஞ்சீபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இது போன்ற கலகம் கடந்திருக்கிறது. அவ்வூரில் திரு சைவர் பனை மரங்களை நட்டு வளர்க்க, அம்மரங்கள் வளர்த்து ஆண் பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக் கண்டு இன் வாண்பளை கள் பெண்பனை ஆகுமோ?' என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வுருக்கு வந்தபோது இந்தச் சாவர், ஆண்பனே களைப் பெண் பனக சாகச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு இணங்கிஞான சம்பந்தர் பதிகம் பாடினார் என்றும், பொழுது விடிந்தவுடன் அப் பக்கமரங்கள் அணாக இருக் சவை பெண் பனைகளாக மாறி பனங்காய்களைக் காய்த்தன என்றும், இதைக் கண்ட சமணர் அந்த ஊரைவிட்டு ஓடி விட்டனர் என்றும், பெரியபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்முக அந்தத் திருவோத்தூர் சிவன் கோவிலில் சமண ரைக் கழுவேற்றுதல் போன்ற சிற்ப உருவங்கள் அமைத்து