பக்கம்:சமணமும் தமிழும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமயம் குன்றிய வரலாறு 71 போதுள்ள பெரிய குனமாகத் தோண்டினான். இதனைப் பெரிய புராணம் இவ்வாறு கூறுகிறது: “ அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் சலக்கம் கண்டவர்தாம் சொன்ன வண்ண மே.அவரை ஓடத் தொடர்ச்சி துரந்ததற்பின் பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் தளத்தழ் கரைபடுத்து மன்ன னவலும் மனமகிழ்ந்து வர்து தொண்டர் அடிபணிந்தான். இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்று தல், பானை களால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலன் களைக் கவர்தல் முதலிய சுலகங்களும் கொடுமைகளும் சச்சரவுகளும் போராட்டங்களும் திகழ்ந்துவந்தன, சமயப் போர்-இல்லை, சமய வெறி- எல்லா காட்டிலும் பெருந் தீங்கு செய்துள்ளது. கிறித்துவர்களை. உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லீம்---கிறிஸ்தவ மதப் போர் களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, தமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் கணக்கில, இவ்வாறெல்லாம் தன்பங்களும் கொடுமைகளும் திசுழ்ந்த படியினாலே கானடைவில், சமணசமயம் செல்வாக் கிழந்து நிலைகுன்றியது. துன்பங்களைப் பொ நச்சுமுடி பாத சமணர்களில் பெரும்பான்மையோர் மதம் மாறி னார்கள், அதாவது சமணசமயத்தைவிட்டுச் சைவர்களா சுவும் வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள், சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர் மேல் சுமத்தினார்கள் என்பது, “போம் பழியெல் வாம் அமனர் தலையோடே," என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவராகிய திருவாய்மொழி விளக்கடரை காரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுது இறார், அந்தக் கதை இது: 1. திருத்தொண்டர் புராணம் தண்டியடிகள், 27.