பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. ஒரு சில பெளத்தர்கள் குறிப்பில் காணப்படுகின்றன அல்லது நான்கு வரியாகவே கிடைத்துள்ளன. ஒன்று சித்தாந்தத் தொகை. பெளத்த மதத்தில் சித்தாந்த நிலையைத் தொகுத்துக் கூறியிருக்கின்ற நூல் இது. மற்றொன்று திருப்பதிகம். புத்தர் பிரான் மீது தோத்திரப் பாடல்களாகப் பாடப்பெற்ற ஒரு தொகை நூல் இது. இன்னொன்று விம்பசாரக் கதை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் 540 முதல் 490 வரை வாழ்ந்த பிம்பிசாரர் என்ற மன்னர் வரலாற்றைப் படித்திருப்பீர்கள். அவர் பெளத்த மதத்தைப் பரப்புவதில் துணையாக இருந்தவர். அவரைப் பற்றி ஒரு சிறு நூல் எழுதப்பட்டு உள்ளது. அதற்கு “பிம்பசாரக் கதை" என்று பெயர். இதில் நான்கு வரிகள் தாம் நமக்குக் கிடைத்துள்ளன. நற்றிணை 2ஆம் பாட்டிலே இளம் போதியார் என்ற பெயரைக் காண்கிறோம். போதி என்ற சொல்லே அவர் பெளத்தக் கவிஞர் என்பதைக் காட்டுகின்றது.

இனி, பெளத்தர்கள் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய அருந்தொண்டுகளை பார்ப்போம். முதலில் ‘மணிமேகலை’ எனும் எழில் கடலில் நீந்தி வருவோம். இதை எழுதியவர் சாத்தனார் ‘இவர் தண்டமிழாசான் சாத்தனார்’ என்று இளங்கோ அடிகளே புகழ்ந்த ஒரு சாத்தனார். இவர் தமிழ்க் கவிஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த உளவியலார். களிமகன் உள்ளத்திலே நுழைந்து அங்கே என்னென்ன காண முடியும் என்று காட்டக்கூடிய ஓர் உளவியலார். ஒரு பித்தனின் உள்ளத்திலே நுழைந்து அவனை ஒளிப்படம் எடுப்பதுபோல எடுத்துக்காட்டக் கூடிய ஓர் உளவியலார், அவர் கூறிய கருத்துக்களை இப்போது நாம் ஓரளவு பார்ப்போம்.

மணிமேகலை சுதமதியோடு, உவ வனத்திற்குச் செல்லும்போது வீதியிலே கண்ட ஒரு காட்சியைக் காண்போம் அங்கே ஒரு சமண முனிவர் வருகின்றார். பிச்சைப்