பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

போராட்டங்களாக மட்டும் கருதப் படவில்லை. அந்தந்த நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களாக கருதப்பட்டன இந்தியக் களத்தில் பேர்ச்சுக்கீசு, டச்சு ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோர் இடையே நடந்த போர்கள் நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையே நடந்த[1] போர்களே ஆகும்.

3. பிரிட்டிஷ் பேரரசில் தொழில் புரட்சி வருவதற்கு முன்பு, இந்தியா பிரிட்டிசுக்கு இடையே நடந்த வணிகம் அளவில் மிகச் சிறியது, அபினும் வண்ணச் சாயப் பொருளும் பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

(19-1-'84) சென்னை, பிரிட்டிசு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் லண்டன் பல்கலைக்கழக துணை வேந்தரும் இந்திய இயல் வல்லுநருமான பேராசிரியர் சர். சிரில் பிலிப்ஸ் "East India Company Came to rule Dot to trade" என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தியது (Hindu 20-1 '84) மேற்கண்ட ஊகத்தை வழிப்படுத்தும்.[2] எனவே ஐரோப்பியரின் ஆதி வரவுக்கு முதன்மைக் காரணம் வாணிகம் மட்டுமே என்பது சரியன்று. நாடுபிடிக்கும்.


  1. இந்திய வரலாறு. சோவியத் வெளியீடு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ ,1973, II, V. II.
  2. The rationale of the British East India Company in india should be attributed to political reasons Prof. Sir, Cyril Philips said it was wrong to seek an economic rationale since at that time (1750-1850) Only indigo and opium were being exported from india and that base was very fragile.
    Hindu 20-1-1984