பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

வாரம் உத்திரமென்று இரண்டுமே கலந்து
வரப்படு சித்தயோ கத்தின்
நரர் முதல் உயிர்கள் எவையையும் புரந்த
நபிபுல்லா சுலையுமான் வரவு
நானில முழுவதும் மகிழ்வுற இராஜ
நாயக மெனப் பெயர் விளங்க
விரவிய படலப் நாற்பத் தாறு, இரண்டா
யீரத்திரு நூற்று நாற் பானுள்
விருத்தம தாகப் புகன் றனன் மதுரை
மீசல்வண் ணக்களஞ் சியமே!

ஹிஜ்ரத் 1223 முஹர்ரம் 14ஆம் நாள் அட்சய வருடம்பங்குனி மாதம் திங்கட் கிழமை உத்திர நட்சத்திரம் கூடிய சித்தயோகத்தில் சுலையுமான் வரலாறு கூறும் இராஜ நாயகத்தை 46 படலம் 2240 விருத்தங்களாக மீசல் வண்ணக் களஞ்சியப் புலவர் பாடினார்.

வண்ணப் பரிமளப் புலவர் தம் ஆயிரம் மசலாவில்,

இயலிறசூவ் திருவடி சாய்ந்த தொள்ளா
யிரத்துடன் என்ப தாண்டின்
முயலும்ப்ர மாதூத வருடத்தில் முழங்குபுளி
யங்குளத்து முல்லாமிய்யா சயிது மகுதூம்
வயது முப் பத்தொன்பான் தனனில் இந்நூல்
உரைத்திட முத்தமிழாற் போற்றிப்
பயிலும் ஐயேழ் எனும்வாலம் பிராயம்! தன்னில்
பரிந்துவண்ணப் பரிமளம்சொற் பகர்ந்தவாறே!

'ப்ரமாத தூத ஆண்டு பிரமா தூத ஆண்டு முல்லா மிய்யா சயிது மகுதூம் தம் மூப்பத்தொன்பதாம் வயதில் கூற, வண்ணப் பரிமளம் தம் 35ஆம் வயதில் எழுதினார்.