பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மானார் தந்த மறுமொழியும் கொண்ட காப்பியம் ஆயிரம் மசலா என்பதாம்! அப்துல்லாஹ் கூறுவார்.

துங்கமாமச லாவினும் குத்தரம்
சொல்லின் ஆதிதன் தூதராகுவீர்!
திங்கள்வீசுல கத்தினில் உம்முடை
தீனிவாதொரு தீனிலை ஆகையால்
எங்கள் மாநகர் உள்ளவர் யாவரும்
யானும் என்னோடிணங்கிய பேர்களும்
பொங்குநற்கலி மாவுரைத் திந்நெறி
பூண்டு தீனிடை புக்குவது உண்மையே!”

இது கேட்ட நபிகள் நாயகம்,

இப்படி உரைக்கக் கேட்டங்கு
மெய்இறசூல்தாம் சொல்வார்
மெய்ப்புடன் உமக்கு மிக்காய்
வேண்டுவ தெல்லாம் கேளும்!
செப்பிடு வித்தை அல்ல
திண்ணமாய் உம்மை நாயன்
ஒப்புடன் எம்மைக் கொண்டே
உத்தரம் சொல்லு விப்பான்!

என்றார். வினாக்கள் தொடர்ந்தன. மாதிரிக்குக் சில:

மானாக மேவந்த மக்கா வில்வாழ்
தேனாவி லேவந்த செப்போ சையாய்
மீனாக மேகொண்ட மெய்த்தூ தரே
தீனாவ தேதென்று செப்பீர்மனே!

-என்பது வினா.

வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சறான கலீமா ஷஹாதத்துடன்
ஈறாத சீபத்தில் ஈமானுமாம்

என்பது பெருமானாரின் விடை!