பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

பிதாவினும் பிள்ளை மூர்க்கம்
பெற்றுறு தந்தை தன்னைச்
சதாளுறும் கோல தாகச்
சதிசெயும் அதுஏ தென்றார்

இது வினா. இதற்குப் பெருமானார் மறுமொழி:

இரும்பு பிறக்கும் கல்லிடத்தில்.
ஈடுபடுத்தும் இரும்பு கல்லைப்
பொருத்த உருக்கை இரும்புபெறும்
பூண்ட இரும்பை உருக்கறுக்கும்
திருந்த நெருப்பை உருக்கீனும்
செய்ய உருக்கைத் தீவாட்டும்
வருந்தும் பிதாவின் பிள்ளைமிடுக்
காகும் மசலா இது என்றார்

இன்னொரு கேள்வியும் மறுமொழியும்:

மண் தரைக்குள் ஏறாது வானிலிருந் தோடாதங்கு
அந்தரத்தில் ஓராறுண் டதுஎமக்குக் கூறுமென
கந்தரத்தோள் இபுனுசலாம் சுருதிவழி யேகேட்க
விந்தமலர்ப் புயத்திறசூல் மெய்யினில் வெப் பென்றனரே

முனாஜாத் என்பதன் பொருள் இரகசியமாக உரையாடுதல்! என்பதாம். இறைவன் மீது புகழ்ப்பாக்கள் பாடி இறைஞ்சுவதையும் இது குறிக்கும், கீழக்கரை செய்யிது முகம்மது ஆலிப் புலவர் பாடிய பன்னிரு முனாஜாத்துகள் முனாஜாத்து மாலிகை என விளங்குகிறது. முகம்மதுவின் பொறுமையை அவர்,

சொன் மனக் குயிரர்கூடிக் கொடுமிடா விளைத்தகாலும்
புன்மனத் திவரையாமும் பொடிபடுத்திட உத்தாரம்