பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109 தேவனை இலட்சுமிதேவியார் கோட்டானாகப் பிறக்கும்படி சாபமிட்டரே. பிரமன் கோட்டானாகப் பிறந்தான்.அத்த கோட்டான் முட்டையிலே குதிரை பிறந்தது, என்றுள்ள பிராணத்தைக் கூறுவார் புராணிகர். சைவப் பிரசங்கி யாரோ 'குதிரைகளா, அடியேனுக்கு அடங்காக் கோபம் பிறக்கும் அவைகளைக் கண்டதும். என் மணிவாசகன் இந்தப் பாழான குதிரைகளாலன்றோ. சிறைப்பட்டான் துயருற்றான் என்று துவங்கி இறுதியில் "தீர யோசிக்கும் போது பரியிடம் பரிவே பிறக்கிறது. ஏனெனில், மணிவா சகரின் பெருமை மாநிலம் அறியும் நிலை, குதிரையாலன்றோ ஏற்பட்டது. எனவே'. குதிரைக் குலம் வாழ்க" என்று முடிக்கக் கூடும். < குதிரையைப் பற்றிப் பேசுவதிலே இவ்வளவு வேறு பாடுகள் தோண்றக் கூடுமானால், நாட்டு நடவடிச்கை. நாடாள்வோரின் திட்டங்கள், ஏடுகளிலே உள்ள கருத்துக் கள் போன்ற பிரச்சினைகளைப்பற்றி பேசும்போது. வேறு பாடுகள் கொஞ்சமாகவா இருக்கும். எனவே மேடைப் பேச்சு பலதிறப்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் பலமும் ஆகிறது. களத்திலே பரிசும் உண்டு பகையும் உண்டல்லவா? கருவியும் கலங்கா உள்ளமும் வேண்டு மல்லவா? கருத்துக்களை கொள்ளும்போது இந்த நிலை அறிந்து. தொகுக்க வேண்டும். மலர்கள் பலவகை - வர்ணத்தில் மணத்தில், இவைகளில் மணமுள்ள மலர், மாலையாக்கப் படலாம். செண்டு ஆக்கப்படலாம். சரம் ஆக்கப்படலாம். மலர் நொண்டு மாலை தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுவதும் காட்டி, காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர். அதுபோலம்