பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

மஹாத்மா காந்தி உலக உத்தமர் மறைந்ததால், உள்ளம் நொந்துகிடக் கும் நாம்,ஒருவருக்கொருவர்' ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது: இழிகுணத்தான், மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலைசெய்து. உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை. எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை: துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளிபரவு கிறது. அதை எண்ணுவோம். ஆறுதல் பெற முயற்சிப் போம். நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார். அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ் கிறோம். அவர் பிறந்தபோது நமது நாடு உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடு வதற்கு முன்னம், மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரை யிலே உள்ள சகல நாடுகளிலும், நமக்கு விடு தலையை விளக்கும் விருதுபெற்று, தூதுவர்களும். வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது. அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால், உலக மன்றத் திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவர் பிறந்தபோது, இங்குத் தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி,ஏங்கிக் கிடந்