பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 முறையிலே.உன்னதமான இலட்சியங்கனைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும் பாடுபட்டு வந்தார். அந்த நேரத்தில், ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால் அவர் கொலை செய்யப்பட்டார். அவர் கண்ட, அந்த நாள் இந்தியா, வீரர்களைக் கோழையாக்கிவிடக் கூடியது. விவேகிகளை விசாரத்தி லாழ்த்தக் கூடியது. முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முதுகெலும்பு முறிந்தது போலிருந்து அடிமைச் சுமையினால் நம்பிக்கை தகர்ந்து போயிருந்த நேரம். முடிதரித்த மன்னர்களெல்லாரும் ஆங்கில ஆட்சியின் பிடியிலே,கோட்டை, கொத்தளம் சுட்டிக்: காத்தவர் களெல்லாரும் நாட்டை இனி மீட்டிட முடியாது என் றெண்ணி வாட்டமுற்றுக் கிடந்தனர். எப்படியோ ஆட்சி நடக்கட்டும்; இதை எதிர்ப்பதோ முடியாத காரியம். எனவே. இதற்குப் பயபக்தி வீசுவாசம் காட்டி, ஏதேனும் பலன் பெற்றுக், காலந்தள்ளுவோம் என்று பலர் எண்ணி விட்டனர். அவர்களிடம் ஆயுதம் இல்லை -- ஆட்சியாளர்களோ ஆயுத பலமுள்ளவர்கள். ஆட்சியாளர்களி' அவர்களிடம் நம்பிக்கை இல்லை. டமோ, நம்பிக்கை, ஆணவமாகிவிட்ட நிலை. போர் இந்த நிலையிலே தோன்றினார் விடுதலைப் தொடுக்க. யார் அந்தச் சமயத்திலே நாட்டை நோக்கினா லும், நம்பிக்கை துளியும் பிறக்காது. இவர் நம்பிக்கை யுடன் பணியாற்றலானார். காட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நானிலத்தின் நன் மதிப்பைப் பரிசாகப் பெற்றார். முடியுமா? என்ற சந்தேகத்தை அவர் விரட்டினார். நாடு விடுதலை பெறவேண்டுமா, அல்லவா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். ஆம்! என்றது அவருடைய தூய்மையான உள்ளம் - உள்ளம் உரைத்ததை ஊராருக்கு அறிவித்தார். ஊரார் சந்தேகழம் பயமு கொண்டனர். விடுதலை வேண்டும். நாடு மீளவும், கேடுதிதம்.நாம்