பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18 குரோதத்தை, துவேஷத்தை, சுயநலத்தைத் தூவும் மூறை யிலே உள்ள போதனைகளை, ஏற்பாடுகளை எண்ணங்களை அகற்றியாகவேண்டும் என்று அவர் எண்ணினார். இந்து மதத்திலே ஏறிப்போய் ஊறிப் போயிருந்த கேடுகளைத் தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மை யான உபதேசத்தாலும், புதிய விளக்க உரைகளாலும் நீக்கும் காரியத்தில் ஈடுபடலானார். அன்பு நெறி தழைக்க வேண்டும் என்றார். அவர் இந்த மதம்,அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது; இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர் என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார். அமளிக் கிடையே நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற் கெல்லாம் சென்று கூறிவந்தார். முறை மிக மிக எளிய வாழ்க்கையில் இருந்துகொண்டு இன் சொல் பேசி. எந்த முறையையும் ஐதீகத்தையும் ஒரே அடியாக ஒழித்துவிடும் புரட்சித் திட்டமும் கூறாமல், மக்களை நல்லவர்களாக்கு மளவுக்குப் பழைய களிலே உள்ள தூசு தட்டி. மாசு போக்கி, பயனுடைய மனித மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஏற்பாட்டிளைச் செய்ய வேண்டுமென்று பாடுபடலானார். இதற்கு இவரைக் கொலை செய்தான் மாபாவி. எண்ணும்போதே நெஞ்சு பற்றுவது மட்டுமல்ல; இவருடைய இன்சொல் முறைக்கே மதவெறி இவரைப் பலி கேட்டது என்றால், நாட்டிலே தலைகீழ் மாற்றம்,செங்கோல், ஜெபமாலை, இரண்டும் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டுமே இனி நமது நாட்களில் அப்போதுதான் தன்னாட்சி நல் லாட்சியாக முடியும். அந்தக் காரியம் செய்யும்போது உத்தமர் உயிரைக் குடித்த மத ஆதிக்க வெறி உலவு மானால். எத்தனை கோட்சேக்கள் கிளம்புவரோ, என்பதை எண்ணும்போதே நெஞ்சு திடுக்கிடுகிறது. மக்களை நல்லவர்களாக்கவேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம் சுய நலம், ஆதிக்க எண்ணம் ஒழித்தாக வேண்டும் என்று பேசி வந்தபோதும் நாட்டை மீட்க வேண்டும் என்று அவர் அன்னியருடன் போரிட்டபோதும் கிளம்பாத