பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஓய்வு நேரம் " எனக்கு ஓய்வு ஏது, இதற்கெல்லாம் - அங்கே நரம்பு முறிய வேலை வாங்குகிறான் - அலுத்துப் படுத்தால் கட்டை போலாகி விடுகிறேன் - நான் போகவில்லை, கூத்துப் பார்க்க - என்று கூறும் பாட்டாளி-" நமக்கு: ஓய்வு கிடையாது -- ஆறு மாதத்துக் கணக்கு இன்னும் எழுதி முடித்தாக வேண்டும் ஒரு வரத்திலே என்று கூறும் எழுத்து வேலைக்காரர், நிரம்பியுள்ள சமுதாயத்திலே. 'ஓய்வு நேரம்' ஆராய நோண்டிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது நாட்டிவே சமூக, பொரு ளாதார அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றன நல்ல விதமான வளர்ச்சி ஏற்பட்டால், ஓய்வு நேரம் உண்மையிலேயே, கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையாகி விடும் - தக்க திட்டங்கள்கூட தீட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். இப்போது முன்னணியிலே இருக்கும் பிரச்சினைகளை எப்படி வாழ்க்கையை நடத்துவது என்ப தாகவே, பெரும்பாலான மக்களுக்கு இன்று இருக் கிறது. எப்போது பார்த்தாலும், ஏதாவது வேலை செய்தபடி இருப்பவர்களையும் காணலாம்-வேலை ஏதும். செய்யாமல் பொழுதை ஓட்டுபவர்களையும் காணலாம். வேலை ஏதும் செய்யாம லிருப்பவர்கள் எல்லாம் ஓய்வாக இருக்கிறார்கள். என்று கூறிவிட முடியாது. வேலை ஏதும் இடைக்காத தால் அய்படி உள்ளவர்களே ஏராளம். 'ஓய்வு கேரம் -வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக, மிச்சமிருக்கும் பொழுது வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் 'காலம்' ஓய்வு அல்ல - அது ஓய்யாரம். வேலை கிடைக் காத்தால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத் திருப்பது ஓய்வு அல்ல திகைப்பு, வேலை செய்யும்