பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21 மனப்பான்மை யற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது ஓய்பு அல்ல அது சோம்பல், ஆக, யாராவது. ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது. கூ ஓய்வு வேறு ; வேலையற்று இருப்பது முற்றிலும்வேறு. காலை முதல் மாலைவரை பாடுபட்டு வேலை செய்து பிழைக்கும் பாட்டாளிக்கு, இரவு தெருக்கோடியில் நடை பெறும் கூத்து ஓய்வு நேரம் பொழுதுபோக்காக அமை கிறது-- கூத்தாடுபவர்களுக்கோ ; இரவு முழுவதும் கூத்து ஆடி அலுத்து, காலையில படுத்துத் தூங்கி, பகலில் விழித்தபடி புரண்டுவிட்டு மாலை நேரத்திலே வெளியே சென்றுவருவது ஓய்வு நேரம் - பொழுது போக்கு நேரம்- வேடிக்கைக்காகச் சொல்வார்கள் - ரயில் ஓடும் போது போர்ட்டருக்கு ஓய்வு - ரயில் நின்று சில கீமிஷம் ஓய்வு கொள்கிறதே அப்போது போர்ட்டாருக்கு வேலை - அது போல ஓய்வு நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம். . வேலை . வேலை செய்து செய்து அலுத்து, இனி செய்யவே முடியாத நிலை ஏற்பட்டால், வேலை செய்யாமல் இருப்பதை. ஓய்ந்து விட்டான்" என்று கூறுகிறோம். அந்த நிலையல்ல ஒய்வு நேரம் வேலை செய்கிறான் இடையே வேலை ஏதும் செய்யாமலிருக்கிறான்- அந்த வேளை தான் ஓய்வு இந்த ஓய்வு நேரம்-ஓய்வின்தன்மை, இதைக்கொண்டு தான், அந்தச் சமூகத்தின் நிலைமையை மதிக்கிறார்கள் அறிவாளிகள். பொதுமக்களில் பெரும் பாலானவர்களுக்குக் கிடைக்கும்' ஓய்வு இருக்கிறதே அதையே நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நலயிறிவாளர்கள். " உழைத்துத்தான் வாழ வேண்டும் - வாழ்வு, உரிமை, உழைப்பு, கடமை. ல் உழைப்பு உடலும் உள்ளமும் முறிந்து போகாத அளவிலேயும் வகையிலேயும் இருக்கவேண்டும். வாழ்விற்கு வகை தேடுவதற்காகப் பாடுபடவேண்டும். "