பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 உள்ள படுகிறபாடு, உடல் வளத்தையும் உற்சாகத்தை பாழ் படுத்திவிடுமானால், தொடர்ந்து பாடு படும் திறன்பட்டுப் போய்விடும், வாழ்வின் சுகத்தை ருசிக் கும் திறனும் கெட்டுப்போய்விடும். உழைப்பு, உருக்குலைந்து விடக்கூடாது-உடலையும் சரி, உள்ளத்தையும் சரி,வாழ் விற்காக வசதி தேடுவதற்கு உழைத்து, அந்த உழைப்பி னாலே, உருக்குலைந்து போகும் நிலை மனிதனுக்கு ஏற்படு மானால், அவன் முட்டையிட்டதும் செத்துவிடும் கோழி, அரும்புவிட்டதும் பட்டுப்போகும் செடிபோலப் பயன் காணாமலும் பயன் தாராமலும், போய்விடுகிறான். உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவை களுக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தக்க வருவாயைத் தருகிறது. இந்த வருவாயைப் பெறுவதற் காக உழைத்த நேரம் போக, மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது, என்ற நிலைமை நாட்டு மக்களின் பெரும் பான்மையினருக்கு ஏற்பட்டால்தான். ஓய்வு நேரம். சமூகத்தின் தரத்தையும், மனப்பண்பையும் உயர்த்தக் கூடிய சக்தி பெறும். நமது சமூகத்திலே இன்றைய அமைப்பிலே, உழவர் கள், இயந்திரத் தொழிலாளர்கள், பல திறப்பட்ட தொழி லாளர்கள். பணிமனைகளிலே வேலை பார்ப்பவர்கள், என்று பல ததம் இருக்கக் காண்கிறோம், யந்திரத்தொழிலாளர் களின் தொகை மொத்த ஜனத்தொகையில் கால் பங்குக் கும் குறைவு. பாதிக்குமேல் உள்ளவர்கள் உழவர்கள்- பணிமனையினர், உழவர் அளவு இல்லை - அதற்கு அடுத்த நிலையினர். இந்த மூன்று வகையினருக்கும் இன்று. வாழ்க்கைத் தரமும் தொழில் முறையும் அமைந்திருக்கும் நிலை. உண்மையான ஓய்வு, உள்ளத்துக்குப் புதிய உற்சாகம் தரக்கூடிய ஓய்வு கிடைப்பது கடினம், ஒரு சிலருக்குக் கிடைக்கும் ஓய்வையும், தக்க விதத்திலே பயண்படுத்திக் கொள்ள மனவளமும் குறைவு, பணபலம் அதைவிடக் குறைவு. இயற்கை நம்மைத் துரோகம் செய்துவிடவில்லை. மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம்