பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 இங்குக் கண்டவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம். தொழில் திறம் போதுமான அளவு பெருகாத்தால் தரித் திரம் தாண்டவமாடக் காண்கிறோம். புதிய முறைகளை யும் கருவிகளையும் கொண்டு, இயற்கை வளத்தைப் பயன் படுத்துவதிலே மற்ற நாடுகளைவிட நாம், மிகப் பின்னணி யில் இருப்பதால், இங்கு, சுவையற்ற, கவைக்குதவாத வாழ்க்கையை நடத்துவதற்கே மிகப் பெரும்பாலான மக்கள், மாடுடன் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிக மிக அதிகமான அளவிலே செலவிடப்படுகிறது. மனிதன் பிணமாகாதிருக்க : நல் வாழ்வு பெற அல்ல முழு வாழ்வு பெறக்கூட அல்ல-சாகாமலிருக்க. ஆகவே, ஓய்வு பாட் டாளியின் வேலையின் கடினம் குறைக்கப்பட்ட பிறகுதான் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும். பெரும்பான்மை யினருக்கு ஓய்வு கிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன் படுத்தினால்தான் பாடுபடுபவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும்; திறமையுடன் பாடுபடவும் முடியும்-- பிறகு பொதுச் செல்வம் வளரும்; சீர் உண்டாகும்; நாடு செழிக்கும். இவைகள் எல்லாவற்றையும்விட மனித் மாண்பு மலரும். உழைத்தோம், வாழ்வின் பயனைப் பெறுகிறோம் என்ற களிப்பு முதலிலே ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும். வேலை மனிதத் தன்மையை மாய்க்காத அளவு-இருக்க வேண்டும் - வேலை நேரத்தை மட்டுமல்ல குறிப்பிடு வது; வேலை முறை தன்மை வேலை செய்பவனுக்கு வேலை நேரத்தில் வேலைக்குத் தேவையான வசதிகளைத் தருவது எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். வேலை மனிதனை, தேயச் செய்துவிட்டால், பிறகு இடைக்கும் ஓய்வு வேளை ஓய்வு தராது- பாதி மனிதரால் ஓய்வு பலனைப் பெறமுடியாது. ஓய்வு.சீமான்களாக உள்ள சிலருக்கு மட்டும் உரிமை யாக இருந்த காலம் உண்டு. நிலைமை இப்போது மாறி வருகிறது - ஓரளவிற்கு நம்பிக்கைத் தருகிற வகையில் ஓய்வு சிலருக்கும்: ஓயாத வேலைத் தொல்லை மிகப் பல ருக்கும் - என்ற முறையில் சமூக அமைப்பு இருக்கும்