பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27 கோப்பை, தக்க முறையிலமைத்து பொழுது போக்குபவர் கள் காண வரலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தால் விண்ணைக்கண்டு களிப்பது, எவ்வளவு சுவையான பொழுது போக்காக மாறும், நம்மையும் அறியாமல், எவ்வளவு பயனுள்ள அறிவும் நமது உள்ளத்திலே குடி ஏறும். பொழுது போக்கு, வீணாகவும் கூடாது. விவேக சிந்தாமணி' பாடம் படிக்கும் பள்ளிக்கூடமுமாகி விடக்கூடாது- சிர மமோ, சிக்கலோ, இன்றி நமக்கு, அறிவானந்தம் தருவ தாய் அமைய வேண்டும். பொதுமக்கள் மணதிலே கலைப் பண்பு ஊற்றெடுக்கும் வகையான பொழுது போக்குகள் திட்டமிட்டு, மிகமிகக் குறைந்த செலவிலே ஏற்படுத்த லாம் நகராட்சியினர். கண்காட்சிகள் இவ்விதமான முயற்சி களிலே ஒன்று - முயற்சி என்று மட்டுமே கூறமுடியும் வெற்றி அல்ல- ஏனெனில் பெரும்பாலான அக்காட்சிகள் கடை வீதிகளாகவே காட்சி தருகின்றன. பயன் இல்லை - சில அக்காட்சிகளிலே, மிருக உணர்ச்சியும் சூதாட்ட உணர்ச்சி யும் தூண்டும் முறைகளில் உள்ளன - தீமையே உண்டா கிறது. ஆனால் கண்காட்சி, பொழுது போக்குக்கு அரிய சாதனம் - அறிவானந்தம் பெறமுடியும். உலகத்தைத் திடுக்கிடச் செய்த மாவீரன் நெப்போலி யனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது சொல்லுவார் கள் தூங்கவும் நேரம் இடையாது - களத்திலே, எங்கே னும் ஓர் இடத்திலே, குதிரைமீது அமர்ந்தயடியே கண் மூடிச்சில நிமிஷநேரம் தூங்குவான் -- அவ்வளவுதான் முடி அம் - நெப்போலியனுக்கு அவ்வளவு வேலை? ஓயாத உழைப்பு - என்று பெருமையாகக் கூறுவார்கள். உண்மைதான் தூங்கவும் நேரமின்றித்தான் போரில் ஈடுபட்டிருந்தான் அந்த மாவீரன். ஆனால் ஓய்வு கிடைக்க வில்லையே அழகான அருவிலே குளித்துவிட்டுச் சிங்காரச் சோலையிலே உலவி வேல்விழிமாது பாடிடும் தோன்மொழி சிந்துக் கேட்டுக் களித்திட நமக்கு ஓய்வில்லையே, என்ன தொல்லையான வாழ்க்கை இது. ஓய்வு துளியுமில்லையே எப்போதும் உழைப்பு - என்ன சுகம் காண்கிறோம் - ஓய். வின்றி உழைக்கிறோம் என்று நெப்போலியன் மனம் நொந் துக் கொண்டானா? இல்லை.