பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 களத்திலே கடும் போரிட்டபடி இருந்து வந்ததால் தூங்கவும் நேரம் கிடைக்காமல்,ஓய்வு துளியுமின்றி இருந்து வந்து நெப்போலியனுடைய நிலையுடன், எல்பா தீவிலே, கைதியாக்கப்பட்டு, ஒரு வெலையுமின்றி, இருபத்தி நான்கு மணிநேரமும் ஓய்வாக இருக்கும் வசதிபெற்ற நெப்போலியனுடைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். களத்லே ஒய்வு கிடையாது. ஆனால் அவன் கண்முன் வெற்றிக்கொடிகள். அவன் செவியில் வீரமுழக்கம் - மண் டலங்கள் அவன் காலடியில் மணிமுடிகளைச் செண்டு களாக்கி விளையாடிக் கொண்டிருந்த வீரன். ஓய்வின்றி இருந்தபோது. ஓய்வு நாள் முழுவதும் வேலை துளியும் கிடையாது - எல்பா தீவில்- ஆனால் அந்தக் கைதி நெப் போலியனுக்கு. அந்த ஓய்வு இனிப்பையா தந்திருக்கும். அந்தஓய்வு, அவனுக்கு, பெருமையோ, பூரிப்போதந்ததா தருமா -- பிணத்தின் மீது தூவப்படும் மல்லிகை தானே அந்த ஓய்வு? நம் நாட்டிலே. பெரும்பாலான மக்களுக்கு, இப்படிப் கட்ட ஓய்வு கிடைக்கிறது. எல்பா தீவுக்குத் துரத்தப் பட்ட நேப்போலியன்கள் இங்கு ஏராளம் - வாழ்க்கை களத்திலே தோற்றுவிடுபவர்களெல்லாம், எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன்கள், அவர்கள் பெற்றிருப் பது ஓய்வு அல்ல-அவர்கள் இன்னமும் வாழ்வே பெற வில்லை. மாளிகையிலே சோம்பேறிகள்' இருந்தால் - கண்ட னம் பிறக்காது, கொடுத்துவைத்தவர், அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை - என்று களியுரை தரப்படும். அவர் மான் வளர்ப்பார் பொழுது போக்குக்கு - மீன் வளர்ப்பார் அழகுக்கு - ஓய்வு அவருக்கு ஒராயிரம் சேட் டைகள் செய்ய இடந்தரும். புகழ்வர்.நாள் முழுவதும் பாடுபட்டு பிழைக்கவேண்டிய ஓயாத உழைப்பாளியின் கிலை வேறு கடிகாரத்தைப் பார்த்து வேலை விட்டு, காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் பேனா ஓட்டும் நண்பர்கள். இடைக்கும் ஓய்வை திரட்டக் கூடிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அறிவானந்த செய்து