பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 றோமோ என்ற எண்ணமுமின்றி அம்மையை அறைந்தான் முதுகில், கன்னத்தில் - தன் தலையிலும் அடித்துக்கொண் டான் - பிறகு தான் கண்ணீரைக் காணிக்கை யாக்கினாள், பத்தினி - காலையிலே ஆலைச்சங்கு அலறுவதற்கு முன்பு அழுகுரல் இவன் காதைத் துலைக்கக் கூடும், இந்தத் தோழ னிடம் ஓவ்வின் உயர்வைப் பற்றி பேசுவது ஓய்வை எப்படி பயன்படுத்துவது என்று கூறுவது, மாளிகையிலே திமிர் பிடித்து உலவும் நாய்,பணியாளைக் கடித்தது. கண்டு சீமான் இன்ன மருந்து சாப்பிட்டால் நல்லது; ஆபத்து இராது என்று பணியாளுக்கு யோசனை கூறுவது போன்ற தாகும். உழைப்பாளியை உருக்குலையச் செய்யும் தொழில் முறையை மாற்றி, சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற வசதி என்ற திட்டத்தை வெற்றியுடன் நடத்திக் காட்டினா லொழிய, ஓய்வு பற்றி ஆராய்ச்சி செய்வது அறிவையும், அலட்சிய சுபாவத்தையும் ஆதாரமாகக் கொண்டு நடத்தும் நாகரிக உலகத்து நயவஞ்சக நாடகம் என்றே சொல்ல வேண்டும்.