பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

.33 முடிவதில்லை. இன்று நாடக மேடையிலே மனிதனைக் காண முடிகிறது, பல கோணங்களில் பல நிலைமைகளில் இந்த மகத்தான மாறுதல், நாடக உலகிலே மட்டுமல்ல அதன் மூலம் நாட்டு மக்களிடையே பெரியதோர் மன மாறுதலை உண்டாக்கி விட்டது. இயல், இசை, நாடகம், மக்கட்கு அறிவு வளச ஆர்வ மூட்ட அகமதிழ்ச்சி பிறக்க,நன்னெறியைக் பயன்பட வேண்டும். காட்டப் அதிலும், நாடக மூலம், இந்தப் பலன்களை எளிதில் அடைய முடியும் இயலிலும், இசையிலும் கருத்துரை களைக் கேட்க மட்டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத் துரையைக் கேட்பதுடன் கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே, நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது. நல்ல நடி கன், நாடகத்தைக் காண்பவர்களிடம், தான் விரும்பும் உணர்ச்சியை அந்த நேரத்திலே ஊட்டிவிட முடிகிறது. மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல நடிகனின் திறமை நாடகத்தைக் காண்பவர்களை உணர்ச்சி வயத்தவ ராக்கி விடுகிறது. எனவே,நாடகத் துறைக்கு உள்ள, வசப்படுத்தும் சக்தி அதிகம். அதிலும், சராசரி அறிவுள்ள வர்களுக்கும், அதாவது இயலை அறியவும் இசையை நுகர வும் தேவைப்படும் அளவுக்கும் குறைந்த அளவு அறிவு படைத்த சராசரி மனிதருக்கும், நாடகம் புரியும் கருத்துக் களைப் புரியவைக்கும்; உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்; செயலுக்கும் தயாராக்கி வைக்கும். அவ்வளவு திறமை கொண்டது நாடகத் துறை. அறிவு வளர, ஆர்வம் பிறக்க, மகிழ்ச்சி தோன்ற, மக்களை நன்னெறியிலே புகவைக்க, நற்பண்புகள் உள்ளத் திலே குடிபுக இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு, முத் தமிழ் அதிலும் முக்கியமாக நாடகம், பயன்படல் வேண்டும். என்பது அடிப்படை உண்மை ; இதைக் காலம் மாற்றது. மாற்றினால், சீர்கேடுதான் விளைவு - எனவே, இந்த அடிப் படை உண்மைகளை அல்ல, மறுமலர்ச்சி இயக்கம் கூடாது என்று கூறுவது. மறுமலர்ச்சி என்பது மாண்புகளை ச-2