பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 நாடக என்று சிந்திக்குப்படி கேட்டுக் கொள்கிறேன். மேடையிலே மனிதனைக் காண விரும்புகிறார்கள். மகேசன் மகரிசி மன்னன் மந்திரவாதி அவதாரங்கள், அடியார்கள் இவர்களைக் கண்டு கண்டு. கண் களுக்கும் கருத்துக்கும் சலிப்பு மிகுந்து விட்டது. அந்தக் கதைகளிலே உள்ள கருத்துக்கள் சில புளித்து விட்டன; சில பொய்த்துப்போய் வீட்டன். வேறு சில உலக மன்றத்திலே கேலிக்குரியன வாக்கப்பட்டு விட்டன; பெரும்பாலானவை கடைமுறைக்கு ஏந்தனவாக இல்லை. வாழ்க்கைப் பிரச்சினைக்கு விளக்கம் தருவதாகவோ, வாழ்க்கைச் சிக்கல்கனைப் போக்கக் கூடிய தாகவோ இல்லை. இப்போது தன்னைப் போன்ற மனி தன் எந்தெந்தச் சூழ் நிலையில் எப்படி எப்படி ஆகிறான்; என் னென்ன செய்கிறான் எதை எதை எண்ணுகிறான் என்று காண விரும்புகிறார்கள். எலும்பைப் பெண்ணுருவாகக் கண்ட கண்கள் இப் போது பெண் எலும்புரு ஆகும் அளவுக்குக் குடும்பத்திலே ஏற்படும் கொடுமைகளைக் காண விரும்புகின்றனர்! கண் இழந்தவனைக் காண விரும்புகிறார்கள்; நண்பனுக்காக. குடும்பத்துக்காக, நாட்டுக்காக வறுமையால், கொடியவர் செயலால்,இப்படி ஏதேனும் ஒன்றினால் கண்ணிழந்தவன் இருக்கிறானே அவனுடைய கதையைக் காண விரும்புகிறார் கள். உழைத்து உருக்குலைபவன் உழைக்காமல் வாழும் வழி கற்றவன். மேட்டுக்குடி வாழ்வு காட்டு ராஜா முறை வேட்டையாடப்படும் மனிதன். விருப்பம் வெதும்பியதால் நொந்து போனவன், வாழ்க்கை வெற்றிக்காக எதையும் செய்பவன், இப்படிப் பலரைக் காண் விரும்புகிறார்கள். தந்தை மகன் உறவு. அண்ணன் தம்பி உறவு இந்த உற வுக்கு வரும் ஊறுகள், அதற்கான காரணங்கள் இவைசு ளைக் காண விரும்புகிறார்கள். ஒருவன் ஏன் நல்லவனாக இருந்தவன் கெட்டவனாகி விடுகிறான். என்ற சூழ்நிலை விளக் கத்தைக் காண விரும்புகிறார்கள். இவற்றுடன், எல்லோ ரும் இன்புற்று வாழ, ஒருவரை ஒருவர் சுரண்டாமல் வாழ மனிதன் மிருகமாகாமலிருக்க என்ன வழி என்பதை அறிய விரும்புகிறார்கள்.