பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42 அவர்களுக்குப் பிடிக்காதன, அவர்கள். செயலாற்றும் வீரர்கள், வாலிபர் தமது போர்த்திறனோடுமட்டும் திருப்திப் படுபவரல்லர். இலட்சியங்கள் கொண்டவர். உலகிலே பல்வேறு நாடுகளில நலனும் நாகரிகமும் ஓங்கி, கல்வி யும், தொழிலும் மிகுந்து மக்கள் இன்பமாக வாழ்கிறார்கள் என்று ஏடுகளிலே படித்தறிந்த வாலிபர்கள் தமது தாய் நெளியக் நாட்டிலே அடிமைத்தனமும் அறியாமையும் கண்டால் கொதிப்படைவார்களல்லவா? உலகெங்கும் கல்வியும் தொழிலும் வளரும்போது, இங்கு 100-க்கு 80-பேருக்குமேல் படிப்பற்று இருக்கக் கண்டால் ஆத்திரம் வரத்தானே செய்யும். உரிமைக்காகப் போராடிய உத்தமர் கள், அக்கிரமங்களை அழிக்க அனைத்தையும் அர்ப்பணித்த தியாகிகள், மக்கள் வாழ உழைத்த மாவீரர்கள், ஆகி. யோர் பற்றிய வரலாறு படித்தறிந்த அவர்கள் இந்தனை யிவே, நம்மாலாவதென்ன பராபரமே, என்ற பஜினைப் போக்கு ஏற்படமுடியாதல்லவா? ஆகவேதான் வாலிபர் கள் விறுவிறுப்புடன் காணப்படுகின்றன. 1என் நாடு பொன்னாடு; எங்கும் இதற்கு இல்லை ஈடு என்று மார்தட்டுகிறான் வாலிப வீரன். நாட்டின் நிலை உரை வேண்டும்; வளம் பெருகவேண்டும்; செல்வம் வளர வேண்டும்; தொழில் செழிக்க வேண்டும்; ஒருவர் ஒருவரை அடக்குவது: சுறண்டுவது; மேல் கீழ் என்று பேதம் காட்டுவது. விசாரத்தோடு விண்ணை அண்ணாந்து பார்ப் பது: வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று வேதாந்தம் பேசுவது: பிறவாவரம் தாரும் என்று சலிப் புச் சிந்து பாடுவது ஆகிய போக்கு முறையும் மாறி "எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியார் சொன்னபடி அளைவரும் உரிமையுடன் உவகையுடன் வாழ் வேண்டும். நாடு பூந்தோட்டமாக விளங்கி, கானிலத் தோர் கண்டு புகழும் நிலை அடைதல் வேண்டும் என்பது வாலிபர்களின் இன்பக் கனவு சுதந்திரம் - விடுதலை- என்றால், சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது புதிய நிலை - புது அழகு-புது உருவம் புதிய மகிழ்ச்சி