பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45 வாலிபர்கள். இதற்கான திறமும் தீரமும் தேவை. அறிவு ஆராய்ச்சி தேவை. இதற்கான வெளி உலகத் தொடர்பு தேவை. இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. இந்தக் காரியத்தை முதியோர்கள் செய் யட்டும்; இவை மிக்க சோர்வளிக்கக்கூடிய காரியங் கள்: நாம் போரிட; எதிர்த்துத் தாக்க: தீயில் குளிக்க வேண்டிய காரியங்களைச் செய்வோம் என்று வாலிபர்கள் இருந்துவிடக் கூடாது. பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்ட முடியாது. அவர்கள் திட்டியான பிறகு கோபிப்பது வீண்வேலை. அந்தப் பணியினை வாலிபர்கள் புரியும்போது, பழமை பயங்காட்டும்; வைதீகம் மிரட்டும்; ஜாதி எதிர்க்கும்; சம்பிரதாயம் சீறும்; குருட்டுக் கோட்பாடுகள் முரட்டுப் பிடிவாதங்கள். அர்த்தமற்ற பற்று பாசங்கள், இவை களெல்லாம் இருண்ட மண்டபத்திலே வட்டமிடும் வௌவால்கள் போலக் கிளம்பும். உற்றார் உறவினர் அண்ணன் தம்பி, பெற்றோர் பெரியவர்கள், எங்கெங் கிருந்தோ, எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்புக் கிளம்பும். இவைகளைக் கண்டு அஞ்சாமல் அயராமல். பணி புரியும் பண்பு வாலிபருக்குத் தேவை. அதற்குத் தெளிவு வேண்டும். எங்கெங்கு இவைகளை எப்படி எம்படி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று அறிந்து செய்யவேண்டும். அதற்கு வெளி உலகத் தொடர்பு வேண்டும். இவைகளைச் செய்கையில் ஏற்படக்கூடிய தொல்லைகள் பலப் பல. அவைகனைச் சரி செய்யும் பொறு மைக் குணம் கலந்த நெஞ்சு உரம் வேண்டும். இவை களுக்காக மனப் பாங்கு வாலிபர்களுக்குத் தேவை. எதிரி ஓர் மாயாவி, கண்ணுக்கே தெரியமாட்டான் தெரியத் தொடங்கும் போதும் ஒரு உருவில் அல்ல, பல உருவங்களிலே தோன்றுவான். "அடுக்குமடா இந்த அக் கிரமம்?' என்று சீறிக் கேட்கும் ஆசிரியர் ரூபத்திலே. "மகனே !...... ஏனோ இப்படி எங்களை வதைக்கிறாய்?" என்று அழுதக் கண்களுடன் நின்று கேட்கும் அன்னை. உருவில், பாபி, என் முகத்தில் விழிக்காதே" என்று ஆத்திரத்துடன் தந்தை உருவில், 'சே, தறுதலையாகி "