பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

47 "கதவை இழுத்துச் சாத்தடா" என்று. சுதந்திர இந்தியாவிலேயும் இது இருக்குமா? அடே அப்பா. கொஞ்சம் விலகு, மேலே படாதே.எட்டி நில்.இதுவும் இருக்குமா? என் குலம் என்ன, கோத்திரம் என்ன? அந்தஸ்து என்ன? என் மகளை அந்தப் பயலுக்கா கொடுக்க முடியும்? நான் என்ன ஜாதி? அவன் என்ன ஜாதி? இந்தச் சீற்றம் இருக்குமா, சுதந்தர இந்தியாவில் இன்று காணப்படும் சகலமும் அங்ஙனமே இருப்பதற்காக அல்ல வாலிபர்கள் பாடுபட்டது. சுதந்திரம் என்றால், இத்தகைய கோரங்கள் ஒழிக்கப்பட்ட நிலை என்பதே முழுப்பொருள். இதற்கான பணிபுரிவதற்கு செஞ்சில் உரம் தேவை வாலி பர்கட்கு / மனிதன் மனிதனாக வாழ வழி கண்டுபிடிக்கும் மகத்தான வேலை, வாலிபர்கள் முன் இருப்பது. நாட்டின் இயற்கை வளத்தையும். மக்களின் மன வளத்தையும் பெருக்கும் பெரும் வலி இருக்கிறது. புதிய வாழ்வு அமைக்கும் பொறுப்புள்ள வேலை. இதற்குப் பல் பொருள் பற்றிய அறிவும் எதையும் பகுத்தறியும் தன்மையும், காரணம் கண்டே எதையும் ஏற்றுக் கொள்ளும் போக்கும் அறிவுடன் தொடர்பு கொண்ட ஆற்றலும், மக்களிடம் மட்டற்ற அன்பும், அவர்களை வாழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், அவர்கள் அனைவரும் வஞ்சிக்காமல் சுரண்டாமல், அடக்கி ஆளாமல், அடிமைப்படாமல் வாழ்க் கூடிய வீதத்தில் நாட்டின் வளத்தையும் முறையையும் புதுப்பிக்க முடியும் என்ற லும், புதியன புகுதலும் ணமும், பழையன கழிது என்ற எண்ணமும், வாலிபர்களுக்குத் தேவை சிற்பியிடம் கற்பாறை தரப் படுகிறது. அவன் வேலைக்கான மூலப் பொருள் -இனி அவனுக்குத் தேவை சிறிய உளியும், பெரிய உள்ளமும் சுதந்தர இந்தியாவிலை. இதுபோலவே, வாலிபர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் தேவை - புது வாழ்வு பெற - முழு வாழ்வு பெற