பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

.52 கிறோம். ஆந்திர நாட்டவரும், சட்டசபை அங்கத்தினரு மான பி.எஸ். மூர்த்தி என்பவர், ஆதித்திராவிடரைத் திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்லப்போவதாக அறி. விக்கிறார். வைதிகர்கள் எதிர்க்கத்தான் எண்ணுகிறார்கள். ஆனால், இன்று அந்தப் பழைய நாள் பரபரப்பும் பதைபதைப் பும் இல்லை. ஆனால் பழைய நாட்டுக் கோட்பாடுகளின் படியே நடக்கவேண்டும் என்று எண்ணும் வை:திகர் களின் மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது. திகைப்பு: திகில்; தடுத்தே தீரவேண்டுமென்ற போக்கு: இதனால் சர்வநாசம் சம்பவீக்குமோ என்ற சஞ்சலம் - இன்று குறைவு குறைந்துகொண்டு வருகிறது. ஆனால் அடியோடு மனமாறுதல் ஏற்பட்ட பிறகுதான், ஆலயப் பிரவேசம் சாத்தியமாகும் என்று கூறுவது ஆண்மை, அன்பு, அறிவுடைமை ஆகாது. எனவே.. கட்டம் தேவை; அதை விளக்க ஒரு பிரசாரத் திட்டம் தேவை - அவசரமாக தேவை. ஆலயங்களில் முன்னாள் இன்னாள் நிலைமை ; அதனால் ஏற்படும் பலன் ; யாராருக்கு எந்தெந்த வகையான பலன் உண்டாகிறது என்பவை, தனிப்பிரச்சினைகள். அதுபோலவே ஆதித்திராவிடர்கள் முன்னேற, ஈடேற் என்னென்ன வழி; ஆலயப் பிரவேசம் ஒன்று மட்டும். அவர்களின் கஷ்டத்தைப் போக்கிவிடுமா என்பவையும் தனிப் பிரச்சினைகள். வர்க் இப்போது நான் கூறுவது. அந்தத் தனிப்பரசனை களைப் பற்றி அல்ல. இந்நாட்டிலே ஆலயங்கள் உள்ளன; ஆதித்திராவிடர்களும் இருக்கின்றனர். ஆலயங்களிலே நாம் போகலாம்; அவர்கள் கூடாது என்று நாம் கூறுகிறோம், நாமே யாரை ஆலயங் களுக்குள் வரக்கூடாது என்று தடுக்கிறோமோ அவர்களைத் தாய் நாட்டு மக்களென்றும், சகோதரர்கள் என்றும் கூறு கிறோம். நாட்டு மக்களின் கணக்கைப்பற்றிப் பெருமை