பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

of 54 2 டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அக்கினித் திராவ கம் வெடி குண்டு, விஷம், சீறும் நாகம்,கொட்டும் தேள் இன்னும் பலப் பல உண்டு ஆபத்துத் தரக்கூடியவை. அலைகளைத் தீண்டாதிருக்க வேண்டும் - நியாயம் அது ஆனால் பலகோடி மக்களை, தாய்நாட்டாரை மூதாதையர் கால முதற்கொண்டு நம்முடன் வாழ்ந்து வருபவர்களைத் தண்ட மாட்டோம் என்று கூறுவது- தீண்டாமையை அனுஷ்டிப்பது - எவ்வளவு வேதனை? எவ்வளவு அர்த்த மற்றது என்பதை எண்ணிப் பார்க்கும் எவரும், 'இனி யும் அந்தக் கொடுமை இருக்கவேண்டும்" என்று வாதாட முடியாது - தீண்டாமையால் இன்ன நிலன் விளைந்தது விளைகிறது - விளையும் என்று கூறவும் முடியாது. அதற்கு மாறாகத் தீண்டாமையால் ஏராளமான கேடுகள் விளைந் திருப்பதைக் காட்ட முடியும். விவரமாகக்கூட விளக்க வேண்டியதில்லை. எட்டுக்கோடி பேர் உள்ளனர் தீண்டா தார் . அவ்வளவு பேர்களுக்கும் மனப்புண் உண்டாக்கு கிறோம். இதைவிட வேறு கேடு என்ன வேண்டும். தயை, தர்மம், அன்பு, நேசம் முதலிய பண்புகள். நாட்டு மக்களிடம் வளரவேண்டும். அதுதான் அவர்கள் நாகரிக வாழ்வு, வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளம் என்றெல்லாம் அறிஞர்கள் கூறக் கேட்டு அகமகிழ்கிறோம். வடலூர் இராமலிங்கரின் சமரச சுத்த சன்மார்க்கத்தை வாழ்த்துகிறோம். இராஜாராம் மோகன்ராய், தயானந்தர் ஆகியோருக்கு விழா நடத்துகிறோம். நம்முடைய நாட் களிலேயே ஹரிஜன் நிதிக்குப் பணம் கூடத் தருகிறோம். ஆனால், தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும் வாரீர். என்று அழைத்தால்,தர்மம்,தயை, அன்பு, நட்பு; முதலிய குணங்களெல்லாம், ஓட்டுக்குள் மறைந்துக் கொள்ளும் ஆமைகளாகிவிடுகின்றன. எங்கிருந்தோ கிளம்பி, வைதீகம் என்னும் நாகம் சீறுகிறது. அதை அட அறிவாயுதம் வேண்டும். " " கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான்- விப சாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள். குடி கெடுப்ப வன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை இலாபமடித் தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கள்