பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 குறைவு உள்ளோர். அழுக்கு மனம் படைத்தோர், இழுக் கான வழிசெல்பவர்கள், ஆலயங்களிலை நுழைய முடியாத படி தடை உண்டோ? இல்லை. ஆனால் ஆதித்திராவிடரை மட்டும், ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம் - நியாயமா? அல்ல என்றுதான் தெரிகிறது. தானே பதில் கூறுகிறீர்கள்? ஆனாம்......என்று ஆனால், ஆனால் என்று அநேக காலமாகக் கூறிவந்தாகி விட்டது? நண்பர்களே ஆனால், என்பதை மறந்து ஆகை யால் தீண்டாமை கூடாது - ஆயைப் பிரவேகம் அவசியம் தான் என் அச்சத்தை விட்டுத் தீர்ப்பளியுங்கள். ஆனால்.. என்று நெகீழ்ந்த நிலையிலேதான் மக்கள் பேசுகிறார்கள். அதற்கு அர்த்தம், கோயிலுக்குள் தீண் டாதாரை விடக் கூடாது என்பதல்ல. ஆனால் சர்க்கார் சட்டம் செய்து விடட்டுமே என்றுதான் மக்கள் கூறு கிறார்கள் என்று. சர்க்கார் என்ன வேண்டும். மக்களின் மனம் இன்று அத்தகைய சட்டமே தேவைப்படாக அளவு பண்படவில்லை.ஆனால் அத்தகைய சட்டம் வருவதைத் தடுத்தே ஆகவேண்டும் என்ற மனநிலை இல்லை.இந்தச் சமயந்தான் கோயில் நுழைவுக்கான சட்டம் செய்யும் சரி யான சமயம் - என்று சர்க்காருக்குக் கூறுகிறேன்-பிரஜை என்ற முறையில்.