பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 படித்துக்கொண்டிருக்கும்போதே நம்மைப் பரவசப் படுத்திவிடும் ஓசை நயமும். பொருள் செறிவும் கொண்ட புத்தகங்கள் மனதைக் கவரும் தன்மை உடையன. இந்த வரிசையிலே, என்மனதை மிகவும் அதிகமாக ஈர்த்த புத்தகங்களிலே கலிங்கத்துப் பரணியை, முக்கியமான தாகக் கருதுகிறேன். அத்தகைய ஏடுகள் சுவை தருவன சுவை ஏற்படுகிறது நிச்சயமாக- ஆனால் பயன் கருதிப் படிக்கும் பருவத்திலே, வெறும் சுவை தரும் எடுகளாகிய கலிங்கத்துப்பரணி, குற்றாலக் குறவஞ்சி ஆகியவைகளைப் படிக்க நேரமும், நினைப்பும், இயற்கையாகவே ஏற்படுவ தில்லை. இனிய நடை எழில் பற்றிய விளக்கம், சிந்து பாடும் சிற்றாறு, மேகத்தை மாலையாகக்கொண்ட மலை. மானும் அதன் என்றும் சென்று நீர் பருகும் சுனை, பங்கப்பழனத் துழும் உழவர், பலவின் கனிமைப்பறித்ததென்று சங்கிட்டு எறியும் காட்சி, கதிர் ஒரு முழமே காணும் கதலி கழுகெனவே நீளும் காட்சி, ஆகியவைகள் போன்ற ஓவியங் களைத் தீட்டிக் காட்டும் காவியங்களிலே. சுவை உண்டு என்பதை உணரவே முடியாத குருட்டறிவோ, பருகவே முடியாத பாமரத் தன்மையோ அல்ல. இன்று அவ்வித மான எடுகளை,நானும்,என் நிலையில் உள்ள உங்களில் பலரும், நாடாத்தற்குக் காரணம், நமது நோக்கம், வேறு ஏடுகளைத் தெடச் செய்கிறது; நமது மனக் கண் முன் தோன்றி, நம்மைப் பணிபுரியச் சொல்லும் பிரச்னைகள் யாவையோ, அவைகளை விளக்கும் ஏடுகளே, இப்போது உள்ளத்தைக் கவருகின்றன. உள்ளம் வளருகிறது - சிந்தனையால். உலகில் உலவும் எண்ண அலைகளால் - வாழ்க்கை எனும் ஆசிரியன் புகட் டும் பாடங்களால் -இலட்சியங்கள். புதிது புதிதாகப் பிறக் கின்றன.இவைகளுக்கேற்ற வண்ணம். அறிவுத் தாகம் ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைத் தீர்க்கும் ஏடுகளை நாடுகிறோம். அழகு,இன்பம், காதல், மாந்தோப்பில் மங்கை நல்லா ளைச் சந்திப்பது போன்ற கதைகள், சுவை தந்த சில சமயம்