பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கள். இயற்கை தரும் செல்வத்தை வசதியைக் கொண்டு, நாளொன்றுக்கு சராசரி இரண்டுமணி நேரம் எல்லோரும் வேலை செய்தால் எல்லோரும் வயிறார உண்டுவாழலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு இயற்கைச் செல்வ மும் அதனை மக்களுக்கான உபயோகப் பொருளாக்கும் பாட்டாளியின் சக்தயும் உள்ளன. இருந்தும் இவ்வளவு இன்னலை இங்குமட்டுமல்ல, எங்கும் இன்று மட்டுமல்ல, பன்னெடுங்காலமாக, அனுபவித்துவரவேண்டி யிருக்கிறது. சகித்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது. சாமான்யர்களா கிய நம் காலத்திலே மட்டுமா வீராதி வீரர்கள் சாம்ராஜ் யாதிபதிகள் காலத்திலேயும் சரி யோகி யாக விற்பன்னர் கள், வேத வேதாந்த சிரோமணிகள், ஆழ்வாராதிகள், நாயன்மார்கள், அஷ்டசித்தியை அறிந்தவர்கள், அரி அரனை அழைப்பவர்கள், ஆத்மஞானிகள் என்போர்களின் நாட் களிலேயும் இந்தப் பிரச்சினை இங்கிருந்து வந்ததுடன், இல் லாமை போதாமை எனும் நோயின் பிடிப்பிலே சிக்கி ஒரு பெருங் கூட்டம் அவகப்படவும், செல்வத்திலும் சுகத்தி லும் சிறுகூட்டம் அமிழ்ந்து கிடக்கவுமான நிலைமை இருந்து வந்தது. இதனை மக்கள் பல காலமாகச் சகித்துக் கொண் டனர். நம்மால் முடியாது என்றெண்ணி மருண்டனர். மாராவது இதை மாற்றும் முறையைக் கூற முன்வர மாட் டார்களா என்று ஏங்கி நின்றனர். எந்த குறுக்குவழி புகுந்தேனும் இந்தக் கஷ்டத்திலிருந்து நீங்க முடியுமா என்று பதைத்தனர். ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டனர். என்னென்னமோ செய்தனர் இந்தப் பிரச் சினையைத் தீர்க்க. இன்னும் ஓர் முடிவு காணவில்லை. மனிதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூடிவுகாண் முடியாத காரணம் என்ன? அறிவு இல்லை என்று கூறிவிட முடியுமா? பறக்கக்கூடக் கற்றுக்கொண்டான்; பார்முழுவ தையும் பாக்கேட் சைஸ் ரேடியோவுக்குள் அடக்கிவிட டான். இன்னமும் பசி, பட்டினி, பஞ்சம் இன்றி எல்லோ ரும் வாழ வழி கண்டுபிடிக்க மனிதனுடைய அறிவு அவ னுக்குப் பயன்படவில்லை. அறிவுப் பஞ்சம் அல்ல இதற்குக் காரணம் அவனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது. அதனாலேயே மனிதன் மனம் அலைமோதி நிற்கிறது.