பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

ஸ்தாபன ஐக்கியம் உலக அரங்கில், மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை பருட்டக்கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை களர்களிட்டது. நீதியையும் நேர்மையையும், சமுதாயத் தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும், தாழிலாளர் பிரச்னையையே அலட்சியப்படுத்திவிட வோ, அல்லது அடக்கு முறைகளால் அழித்துவிடக் கூடுமென்கிற எண்ண முடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டும், புதுப்புது உருவங்களைக் காட்டிக் கொண்டும் இருக்குமே ஒழிய, தானாக மங்கிவிடவும் செய் யாது; தாக்குதலால் தகர்ந்தும் போய்விடாது. பொது அறிவும், ஜனநாயக உணர்ச்சியும் வளர வளர, பிரச்சினை பலம் பெற்றுக் கொண்டுதான் வரும். எனவே, தொழி லாளர் ஸ்தாபனத்தைப்பற்றிச் சிந்திக்க வேண்டியது. பொறுப்புள்ள யாருக்கும் அவசியமானதாகிவிட்டது. ஸ்தாபன ரீதியாகப் பிரச்சினைகளைக் கவனித்து முடிவு செய்யும் எண்ணமும் ஏற்பாடும், இப்போது எங்கும் பரவிவிட்டது. எந்த ஸ்தாபனமும்.ஐக்கியத்தை. ஒற்று மையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே, வலிவுடன் விளங்கும்,பயன் விளையும். ஆகவே, ஸ்தாபன ஐக்கியத் தைக் கவனித்தாக வேண்டும். ஸ்தாபனம் - அதாவது அமைப்பு -பலருடைய எண் ணங்களைத் திரட்டி, பலருடைய பலருள் சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்- ஓர் பாசறை, பாசறையிலே, பலவிதமான போர்க்கருவிகளும் வீரர்களும் தேவை - கருவிகளின் எண்ணிக்கையும் வகை