பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சமயந்தொறும் நின்ற தையலாள்

சேல்பட் டழிந்தது. செந்தூர் வயற் பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி

யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும்

வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை

மேலயன் கையெழுத்தே.

உலகிற் சிலர் நாளும் கோளும் நமக்கேற்றனவாக இல்லை; எனவே என் செய்வது எனத் தயங்கி நிற்பர். அத்தகையோரையும் கந்தரலங்காரத்தில் இடித்துரைத்து, முருகன் தாளினை நம்பிக்கையோடு நலமுற வணங் கினால் நாளும் கோளும் ஒன்றும் செய்யா தீவினை செயலற்று நிற்கும்; எனவே முன்னியது முடிக்கும் முருகன் முன்வரப் பரவி நிற்பீராக என்கிறார் அருணகிரியார்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை

நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென்

செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுங் தண்டையுஞ் சண்முகமுங்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவங்து

தோன்றிடினே.

முருகப் பெருமானை மறவாது மனத்தில் இருத்து வோர் என்றென்றும் தாழ்வின்றித் தகவுடன் வாழவர் என்று கந்தரலங்காரம் கவினுறக் கழறும்.