பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சமயந்தொறும் நின்ற தையலாள்

பரம்பொருளின் அடியார் அருள்மிகு கருமாரிதாசர். அண்மையில் அருட்கனிச் சிறப்பை அவர் வடித்திருக்கும் அழகினை அவர் வாக்கால் அறிவதே உவப்பும் உறுதியும் ஒருங்கே தருவதாகும்.

"கருதரிய மாயையைக் கணத்தினில் போக்கியருள்

கனநிலை யுணர்வளிக்கும் காமாதி பிணிகளைக் கண்கலங்கச் செய்யும்

கருத்துணர் வளிக்கு மன்றே கரும்பிணி யெலாம் நீக்கும் வஞ்சமுறும் பகைவரைக்

கதியற்ற திகைப்பி லாழ்த்தும் கலைநாதத் தத்துவ முறையெலாம் உணர்த்தியருட்

கடலினில் மூழ்கச் செய்யும் அருட்சோதி நிலையீங்து அஞ்செழுத்தின் மூலம்

அறிவுற உணர்த்து மன்றே அருளரசிக் கருமாரி அருட்கனிச் சிறப்பியல்பை

அரனாலும் சொல்ல வெளிதோ திருமகளும் கலைமகளும் வெண்கவரி வீசவும்

சிங்கவா சனத் தமர்ந்து திருநீற்று வேற்காட்டில் அரசோச்சும் செல்வியே

தேவிகரு மாரி யுமையே'

-ழரீதேவி கருமாரியம்மன் சதகம் : 47

அருள்மிகு கருமாளிதாசர் "சேரவாரும் ஜகத்திரே" எனும் தாயுமான தயாபரர் குரலில் தைப்பூசத் திருநாளில் சங்கரியாம்-வேண்டியனவெல்லாம் விரும்பிக் கொடுக்கும் அருட்சக்தியாம் அருள்மிகு கருமாரியம்மனின் பெருமை யினை நாமணக்கப் பாமணக்கப் பாடியின்புறுகிறார். நம்மையெல்லாம் இடித்துரைத்து அம்பிகையின் அருள் பெற்றுப்யும் செந்நெறியினைச் சிறக்கச் செப்புகின்றார்.