பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சமயந்தொறும் நின்ற தையலாள்

பாடலும் ஆசிரியரின் சிறந்த சொல்லாட்சித் திறனை விளக்கி நிற்கிறது.

'குலமெனும் விருக்கம் தோன்றிக்குழுஉச்சியினைப் பணர்விட் டோங்கி கலனுறு செல்வ மென்னும் நறுந்தழை யீன்று வண்ணச் சிலைநுதற் பவளச் செவ்வா யனையெனுஞ் செம்பொற் பூவிற் கலனணி நறவஞ் சிந்தும் கனியினும் கனிந்த பாவை' விலாதத்துக் காண்டம்; பாதைபோந்த படலம் : 1.3

விரிந்த கருத்துகளைச் செறிவுற அமைப்பதற்கு ஆசிரியரின் சொல்லாட்சித் திறனே பெரிதும் உதவியுள்ளது.

வன்மை உணர்ச்சிக்கேற்ப வன்மை சொற்களை ஆசிரியர் கையாண்டிருப்பதை,

'காற்றெனப் பறக்கும் ஊழிக் கனலெனச் சீறுங்கொல்லும்

கற்றென வெதிருஞ் செவ்விற் குலவரை யனைத்தும் சுற்றும் தோற்றிடா விசும்பிற் றாவும் சுழலுமட் டிகிரியென்னச் சீற்றமுற் றடுத்துப் பின்னும் முன்னுமே திரியு மன்றே'

(நுபுவ்வத்துக் காண்டம்; உமறுகத்தாபு ஈமான் கொண்டபடலம் : 46

என்ற பாடலில் காணலாம். வல்லின றகரம் மீண்டும் மீண்டும் வந்து வன்மை உணர்ச்சியைத் தருமாறு ஆசிரியர் படைத்துள்ளார். யாத்திரைப் படலத்தினும காபிர்கள் முகம்மதுவை அடித்துத் துன்புறுத்தியதைப் பாடும்போது வல்லின மெய்களே வரும்படிப் பாடி வன்மை உணர்ச்சியைப் படைத்துக் காட்டுகிறார் ஆசிரியர்.