பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17s. சமயந்தொறும் நின்ற தையலாள்

ஆகிய பாடல்களில் எதுகைத்தொடை சிறப்புற அமையுமாறு ஆசிரியர் சொற்களை அமைத்திருக்கின்றார்

"வடிவுறுஞ் செம்பொற் பூவில் வாசம்வந் துறைந்த போலும் கொடிமலர் அதனிற் சேர்ந்த கொழுநறா நிறைந்த போலும் கடிநெடுங் கழையிற் செவ்விக் கதிர்மணி தரித்தல்போலும் மடிகடம் புதல்விக் கின்பப் பருவம்வந் தடைந்த தன்றே"

-ஹிஜிறத்துக் காண்டம்; பாத்திமாத் திருமணப் அடலம் : 1.0

என்ற பாடலின் மூன்று அடிகளிலும் இயைபுத் தொடை அமையுமாறு பாடியிருக்கிறார்.

உரைநடையில் மீண்டும் மீண்டும் ஒரே வகைச் சொற்களை அமைத்து எழுதுவது. பொருள் விளக்கத் திற்கு வேண்டுவதாகும். கவிதையில் வந்த சொற்களே மீண்டும் வருமாறு அமைப்பது, அணியாக அமைந்து, கவிதைக்கு அழகு கொடுப்பதாகும்.

'வீதியி னழகோ வந்த வேந்தர்கோ னழகோ சூழ்ந்த

மாதவ ரழகோ யாது பெரிதென மதித்துச் சொல்வார் ஆதிதன் தூதர் ஈன்ற அளிவைதம் மனத்தின் கோலம் பேதமொன் றின்றிக் காணப் பெற்றதே அழகென் பாரால்'

ஹிஜிறத்துக் காண்டம்; பாத்திமாத் திருமணப் படலம் : 147

எனும் பாடலில் அழகு என்ற சொல் பலமுறை பயின்று கவிதையை அழகுபடுத்துகின்றது.

ஆசிரியர் இனிய தமிழ்ச் சொற்களை மட்டுமே பெய்து கவிதை யாத்தல், தமிழ்ச் சொற்களோடு அரபி: பார்சி சொற்களைக் கலந்து கவிதை யாத்தல் எனும் இரு முறைகளில் இக் காவியத்தைப் படைத்திருப்பதைக் கற்றவர் உணரலாம்,