பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IQ சமயந்தொறும் நின்ற தையலாள்

அருவமு முருவு மாகி

அகாதியாய்ப் பலவா யொன்றாப் பிரமமாய் நின்ற சோதிப்

பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங்

கரங்கள் பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்

குதித்தனன் உலக முய்ய.

இவ்வாறு உலகம் உய்வதற்குத் திருவவதாரமெடுத்த திறலுடை முருகப்பெருமானின் இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கிரங்கும் பெருமாளாக விளங்குகின்றார். எனவேதான், தமிழ்க் கடவுளாக விளங்குகின்ற முருகப்பெருமானை அவருவக்கும் முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் பெருவிருப்பு உடையவன் என்று அனுபவ முறையில் அறிந்த பெரியோர் பேசுவர் :

மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன்

முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப் போன்'

எனவே, அடியார்கள் சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு", திருமுருகப்பெருமானை உன்னிச் சென்றால் இன்னே பெறுக நீ முன்னியவினையே" என்றபடி நினைத்தவெல்லாம் நிச்சயம் பெறலாம். எனவே எண்ணுவன நல்லவே எண்ணவேண்டும்; அவ்வாறு எண்ணியனவற்றைத் திண்ணமாய்ப் பெற வேண்டும்; அவ்வாறு திண்ணமாய்ப் பெறுவதற்கு வேண்டுவன இவை யிவையென்று அருணகிரிப் பெருமான் தாமியற்றிய கந்தரலங்காரக் கவினார் பாடலொன்றில் கிளத்தக் காணலாம்,