பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72& சமபந்தொறும் நின்ற தையலாள்

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் கின்ற பாதனாம் பரமயோகி பலப்பல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினானைப் பெருவேளுர் பேணினானை ஒதங்ா வுடையன் ஆகி உரைக்குமாறு உரைக்கின்றேனே. -திருநேரிசை : நான்காந் திருமுறை : திருப்பெருவேளுர் திருநாவுக்கரசர் தேவாரம்: 579

இத் தன்மை வாய்ந்த இறைவனை மறந்தவர் சுவர்க்கப் பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே என்கிறார்

உமறுப்புலவர்.

நம்மை வாழச் செய்யும் இறைவனை நினைத்து வணங்கி வாழ்தலே முறையாகும்.

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும் ,

நமச்சிவாயத்தை நான் மறவேனே.

என்கிறார் இராமலிங்கசுவாமிகள். பெற்ற தாயைப் பிள்ளை மறந்தாலும், பிள்ளை தாயை மறந்தாலும், உடலை உயிர் மறந்தாலும், உயிரை அதனோடு பொறுந்தி யிருக்கின்ற உடல் மறந்தாலும், அரும்பாடுபட்டு கற்ற கல்வியை மனம் மறந்தாலும், எப்போதும் இமைக்கும் கண்கள் இமைக்க மறந்து போனாலும், உடலுக்குள்ளே உயிருக்கு உயிராய் உறையும் இறைவனை மறக்க