பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி. Iss- 123

மாட்டேன் என்கிறார் வடலூர்ப் பெருமானாகிய வள்ளலார்.

இறைவனைத் தன் முனைப்பால்-தான் என்ற ஆணவத்தால் - செல்வச் செழிப்பால் - இன்பதுன்ப வாழ்வால் மறந்தவர் இறைவன் உறையும் மோட்சவுலகத் தையும் மறந்து, தாம் வாழும் மண்ணுலகத்தையும் புத்தி மயங்கிய புன்மையாலே மறந்தவர் ஆவார்கள் என்று உமறுப்புலவர் அழுத்தமாக அறிவுறுத்துகின்றார்.

நினைப்பவர் மனமே கோயிலாகக் கொண்ட இறைவன் ஒருவனே.

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்

எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வமொன்றென்று அறியீர்’ என்ற இராமலிங்க சுவாமிகள் திருவாக்கினை நோக்குவோ

ப|| பி.

மேலும் வணக்கத்திற்குரிய முகம்மது நபிகள் நாயகம் அவர்கள் இந் நிலவுலகத்திற்கு வழங்கிய செய்தியாகத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் குறிப்பிட்டுள்ள பrடல் வருமாறு:

அரபிய நாட்டில் தோன்றிய

ஆண்டவன் ஒருவன் என்னும்

மரபினை வாழச் செய்த

மகம்மது கபியே! போற்றி!