பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 15

பழந்தமிழர் கொண்ட நம்பிக்கை, முருகனைக் குன்று, தொறும் ஆடிவரும் குமரவடிவேலன்' எனக் கூறுவர். இது குறித்தே தொல்காப்பியனார் சேயோன் மேய மைவரை உலகமும் என்றார். குறிஞ்சி நிலக் கோமானாகக் குமரனைக் கோலங்கொண்ட நாடு இது. குன்றுகளில் எல்லாம் அவன் அருட்டிருப் பாதங்கள் பதிகின்றன என்பது பெரியோர் முடிபு. பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய புலவரும் கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்பெறுபவரும் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் இளவல் கருனைப் பிரகாச சுவாமிகளின் அருமையானகொரு கருத்தினைத் தம் சீகாளத்திப் - புராணத்தில் வெளியிடுகிறார். கல்' என்பதற்கு மலை’ என்ற பொருள் தமிழில் உள்ளதை நாம் அறிவோம். இதனை வைத்துக் கொண்டு ஒர் விழுமிய நயந்தோன்றும் வியத்தகுகருத்தினை வெளியிடுகின்றார் அவர். "முருகப் பெருமான் என் மனத்தைவிட்டு நீங்காமல் எஞ்ஞான்றும் நீக்கமற நிறைந்திருக்கும் காரணத் ைத யான் கண்டு கொண்டேன். அது என்னவெனில், முருகன் தன் மன முவந்து வாழும் கற்களில் (மலைகளில்) உன் நெஞ்சம் ஒரு கல்லே என்று மயங்கித் துணிந்து என் நெஞ்சக் கனகல் லில் கொலு வீற்றிருக்கின்றான்போலும்” என்று பாடிப் பரவுகின்றார்.

இச்சீரிய கருத்தினையே தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும் 'முருகன் அல்லது அழகு" என்னும் தம் அரிய நூலில் விளக்கமுறப் புலப்படுத்திக்காட்டியுள்ளார். எங்கெங்கெல்லாம் அழகு கொலு வீற்றிருக்கின்றதோட களிநடம் புரிகின்றதோ, அங்கங்கெல்லாம் அழகுக் கடவுளாம் அணிமுருகன் நெஞ்சமர்ந்து உறைகின்றான். கண்ணைக் கொள்ளை கொள்ளும் கவினார் அழகு