பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முத்தித்தலங்கள்

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் வீட்டிற்கும் சுற்றத்திற்கும் நாட்டிற்கும் ஆற்றவேண்டிய கடமைகளைச் செவ்வனே ஆற்றி, அறநெறி போற்றும் அருளாளர் துணையுடன் இறையருளுள் கலத்தல் இன்றியமையாத வாழ்வுப் பயனாகப் போற்றப் பெறு கின்றது. இவ்வுலகச் சமயங்கள் யாவும் இக்கருத்தை வலியுறுத்தக் காணலாம். அவற்றுள் சைவ சமயம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் வாழ்வியல் நெறியைச் சிறப்புறச் சித்திரிக்கின்றது.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்தொருமித்து-ஆதரவு பட்டதே இன்பம் பரனைங்னைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு

என்னும் பழம்பாடல் இதற்குச் சான்றாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் இந்நான்கும் உறுதிப் பொருள்கள் என உரைக்கப் பெறுகின்றன. வடமொழி அறிஞர்கள் இவற்றைப் புருஷார்த்தம்’ என்று கூறுவர். உறுதிப் பொருள் நான்கனுள் வீடு என்பது உலகக்கட்டு களிலிருந்து விடுதலை பெற்று முத்தியடைதலாம். முத்தி யடைதலையும், முத்தியளிக்கும் கடவுள் ஆற்றலையும் முத்தியடையத்தக்க தலங்களையும் நம்முடைய முன்னோர் கள் நம்பி வந்தனர். அவர்கள் தம் நம்பிக்கையை நூல் களின் வழி வெளிப்படுத்தியும் உள்ளனர். அச்சான்றோரின்