பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சமயந்தொறும் நின்ற தையலாள்

மூர்த்தி எழுந்தருளியுள்ளார். அவர் இருக்கும் இடத்தைத் திருமூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் வழங்குவர். வன்மீகநாதர் என்பதைப் புற்றிடங்கொண்டார் என அழகுத் தமிழில் உரைப்பர். இக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் உற்சவமூர்த்கி தியாகராசர். இவருக்கென்று தனிச்சந்நிதி உள்ளது. அதனைத் தேவசபை என்பர். அல்லியங்கோதை, கமலாம்பிகை என்னும் இரு அம்பிகை கள் இக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ளனர்.

திருவிழாக்காலங்களில் தியாகராச பெருமானுடைய நடனம் சிறப்புடையதாகப் போற்றப்பட்டு, பக்தர்கள் பலராலும் கண்டு களிக்கப் பெறுகின்றது ஆடல்வல்லாரின் அந்நடனத்தை அ.சபா நடனம் எனக் குறிப்பர். அழகும், பொலிவும், துய்மையும், அருளும் நிறைந்த இடமாக இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயிலுக்கென்றுள்ள தடாகம் க ம லா ய ம் என்னும் பெயருடையது. இதனடிப்படையில் இவ்வூருக்குக் கமலை என்ற பெயரும் உள்ளது. த்தடாகம் 18 ஏக்கர் பரப்புடையது. "திருவாரூர்த் தேரழகு என்பது இவ்வூர்த் தேரின் சிறப்பு நோக்கித் தோன்றிய பழமொழியாகும். வழிபாட்டு ஒலியும். வேத மந்திரங்களின் ஒலியும், பல்லியப் பாடல் களின் ஒலியும் இவ்வூரில் ஒலித்தவண்ணம் இருந்தமையை,

வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் மணிமுழ வோசையும் கீழ ஓசையு மாய்க்கிளர் வுற்றவே

என்னும் சேக்கிழார் பெருமானின் திருத்தொண்டர் புராணப் பாடல் சுட்டுகின்றது. அறியாமல் பசுவின் கன்றைக் கொன்ற தன் ஒரே மகனைத் தேர்க்காலில்