பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மூவர் தேவாரத்தில் சில புராண மரபுச் செய்திகள் தோற்றுவாய்

முருகப் பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்கள் போல சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் காட்சியளிக் கின்றன. அவற்றுள் மூவர் பாடியவற்றிற்குத் தேவாரத் திருமுறைகள் என்று பெயர். மூவர் என்னும் தொகைக் குறிப்பு மொழி இங்கே திருஞானசம்பந்தரையும், திருநாவுக்கரசரையும் சுந்தரமூர்த்தி சுவாமிகளையும் குறிக்கும். இம்மூவரும் இறைவன்மேல் பாடிய இசைப் பாடல்களுக்குத்தான் தேவாரம் என்று பெயர் வழங்கு கிறது. பெரும்பாலும் பத்துப் பத்தாகப் பாடப்படும் பாடல் தொகுதிகளைப் பதிகம் என்று வழங்குவர். மேற்கண்ட மூவரும் தலங்கள்தோறும் சென்று அங்குள்ள சிவபெருமானைப் பதிகம் பாடி வணங்கி வந்தனர். அப் பதிகங்களில் கிடைத்தளைகளை ஏழு திருமுறையாக நம்பியாண்டார் நம்பி என்பவர் தொகுத்துள்ளார். திருஞானசம்பந்தர் பாடியவை ஒன்றாவது இரண்டாவது மூன்றாவது திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் பாடியவை நான்காவது ஐந்தாவது ஆறாவது திருமுறை களாகவும் சுந்தரமூர்ததி சுவாமி பாடியவை ஏழாவது திருமுறையாகவும் வகுக்க.பட்டுள்ளன. இப்பாடல்களில் மரபாய் வழங்குகின்ற புராணச் செப்கிகள் எக்தனையோ வங்கல் என அவற்றுள் மூவர் தேவாரத்தில் முதல் ஐந்து பதிகங்களில் வந்துள்ள புராணச் செய்திகள் என்னும் தலைப்பில் இக்கடடுரை அமைந்துள்ளது.