பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சமயந்தொறும் நின்ற தையலாள்

'பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா

எத்தான்மற வாதேகினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூ ரருட் டுரையுள் அத்தாவுனக் காளாயினி அல்லேனென லாமே"

சுந்தரமூர்த்தி சுவாமிகள் (7-1) திருஞானசம்பந்தர் தம் முதற் பாட்டினைப் புராண மரபுச் செய்திகளோடே தொடங்குகின்றார். "உலகத் தைப் படைப்பவனைப் பிரமதேவன் என்று புராணங்கள் புகலும். அவன் தாமரை மலரில் வீற்றிருப்பவன். ஆதலால் அவனை ஏடுடைய மலரான் என்று குறிப்பிட்டு, அவன் முற்காலத்தே வணங்கி ஏத்த அவனுக்கு அருள்செய்த பிரமாபுரம் மேவிய பெருமான் ஆகிய இவன் தோடுடைய செவியனாய் விடை ஏறி துர வெண்மதி சூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வனாய் உள்ளான்" என்று கூறுகின்றார். வடமொழியில் யசுர் வேதத்தின் பிரிவாக உள்ளது ரீ ருத்திரம் என்பது. இது இறைவனைப் பலவாறாகக் கூறிப் போற்றுகின்றது. அது ஓரிடத்தில் "தஸ்கராய நம : தஸ்கரானாம் பதயே நம :" என்று கூறுகின்றது. (தஸ்கரம்-திருட்டு) "கள்வனாக விளங்குகின்ற இறைவனே! உனக்கு வணக்கம்; கள்வர்கட் கெல்லாம் தலைவனாக விளங்குபவனே! உனக்கு வணக்கம்" என்பது அச்சுலோகத்தின் பொருளாகும். இவற்றைப் படிக்கும்பொழுது பூரீ-ருத்திரம் இறைவனை ஏன் கள்வனாகவும் கள்வர்கட்கெல்லாம் தலைவனாகவும் கூறிற்று என்ற வினா எழுகின்றது. அதற்கு விடையாக 'இறைவன் என் உள்ளத்தைக் கவர்ந்துகொள்ளும் கள்வனாக உள்ளான்' என்று திருஞானசம்பந்தர் கூறுகிறார். கவர் கள்வன்' என்பது இங்கே வினைத்தொகை. கவர்ந்த கள்வன், கவருகின்ற கள்வன், கவரும் கள்வன் என்று